பாரிஸின் லூவ்ரே ( Louvre) அருங்காட்சியகம் மீளவும் திறப்பு!
பாரிஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் இன்று மீளவும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீளவும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அருங்காட்சியகம் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியக ஊழியர்களின் பொதுக் கூட்டத்தின் போது வேலைநிறுத்தத்தை கைவிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க தொழிலாளர்கள் ஜனவரி 5 ஆம் திகதி மற்றொரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum)!





