இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ஆசிய கோப்பை அலமாரியில் பூட்டிவிட்டு வெளியேறிய தலைவர்
நடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கோப்பை தொடர்பில் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் போட்டியில் சம்பியனான இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய ஆசிய கோப்பையை தனது அலுவலகத்தில் வைத்து ஆசிய கிரிக்கெட் சபை (Asian Cricket Council) தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) பூட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சாடியுள்ளன.
டுபாயை தலைமையகமாக கொண்டு செயற்படும் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக பாகிஸ்தானை சேர்ந்த மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) செயற்படுகிறார்.
இரு நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக, தலைவரின் கைகளால் ஆசிய கோப்பை பெற்றுக்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி மறுத்திருந்தது.
இந்நிலையில் தனது அனுமதியின்றி, இந்திய தலைவர் நேரில் வராமல் ஆசிய கோப்பையை யாருக்கும் ஒப்படைக்க வேண்டாம் என்று மொஹ்சின் நக்வி தனது ஊழியர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, கோப்பையை இந்திய அணியிடமோ அல்லது பிசிசிஐயிடமோ வழங்குவதில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் (BCCI) இந்த செயலை கடுமையாக கண்டித்து, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் விளையாட்டுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கோப்பை ஒரு தனிநபரின் சொத்து அல்ல என்றும், அதை உடனடியாக சாம்பியன்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வலியுறுத்தியுள்ளது.
இந்த செயற்பாடு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறைப்பாடு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தயாராகி வருகிறது.





