பாரிஸில் வெளிநாட்டு பெண்களுக்கு நேர்ந்த கதி
பாரிஸ் Champ-de-Mars பகுதியில் வைத்து இரு பெண் சுற்றுலாப்பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Latvia நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நள்ளிரவு அவர்கள் மதுபான விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய போது, அவர்களை பின் தொடர்ந்து சென்று வழிமறித்த நால்வர் கொண்ட குழு, அப்பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அப்பகுதியில் இரவுநேர கடமையில் ஈடுபட்ட பொலிஸார் விரைந்து வந்து அப்பெண்ணைக் காப்பாற்றினர். மேலும் குறித்த நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் எகிப்த் மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.





