நீளமான நாக்கைக் கொண்ட நாய் கின்னஸ் சாதனை படைத்தது

உலகிலேயே மிக நீளமான நாக்கைக் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த Zoey என்ற நாய் படைத்துள்ளது.
Zoey, லாப்ரடோர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் கலவையானது, 12.7 செமீ நீளம் நாக்கை கொண்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் Zoey வசித்து வருகின்றது. இதற்கு முன்னர் பிஸ்பீயி என்ற நாய் இந்த சாதனையை தக்க வைத்திருந்தது. அதன் நாக்கு 9.49 செ.மீ நீளமாக பதிவு செய்யப்பட்டது.
Zoey அண்டை வீட்டாருடன் நட்பாக இருப்பதாகவும், பந்துகளை எடுப்பது, வெளிப்புற நடவடிக்கைகள், கார் சவாரி மற்றும் நீச்சல் போன்றவற்றை விரும்புவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
(Visited 13 times, 1 visits today)