இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் பயன்படுத்தப்பட்ட நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் முறையே 19.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி மேலாண்மை அறிக்கை கூறுகிறது.
2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் கையடக்க தொலைபேசிகளின் இணைய இணைப்புகள் உட்பட இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 21.9 மில்லியனாக உள்ள நிலையில் 1.0 சதவீதம் குறைந்தென அறிக்கை கூறுகிறது.
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கையில் 100 பேருக்கு 146.9 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் இருந்தன.
2023 ஆம் ஆண்டில், 100 பேருக்கு 137 கையடக்க தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் வரை குறைவடைந்துள்ளது. அது 6.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய உபகரணங்களுக்கு VAT விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.