இலங்கையில் பேருந்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
“ஜனவரி மாதத்தில் இருந்து பேருந்து இறக்குமதிக்கு சாதாரணமாக ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சம் ரூபாய் செலவாகும். 18% வாட் வரி அதிகரிப்பால் மேலும் 20 லட்சம் அதன் விலை உயரும்.
அந்தத் தொகைக்கு பேருந்தினை கொண்டுவந்து பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ள பஸ் உரிமையாளர்களுக்கு முடியாது. அத்துடன் உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, பரமாரிப்பு செலவு அதிகரித்து வருகிறது.
மிகப் பாரதூரமான விடயம் எரிபொருள் விலை உயர்வு ஆகும் எரிபொருளுக்கும் வெட் வரி விதிக்கப்பட்டவுள்ளது. அப்போது டீசல் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். பொது மக்களுக்கே இது சிக்கலை கொடுக்கும்.
இவை அனைத்தும் அதிகரித்தால் மீண்டும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் போக்கு உள்ளது. இதுபற்றி ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.