சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்த வீரர்கள் பூமி திரும்பியவுடன் காத்திருக்கும் சவால்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சன்னி வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொண்டனர்.
நேற்று முன்தினம் (16) அங்கு வந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில், மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரருடன் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள்.
பூமிக்குத் திரும்புவதற்கான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய சன்னி, இப்போது எப்படி நடப்பது என்பதையே மறந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
அத்துடன் அவர்கள் பூமிக்கு திரும்பியவுடன் பல்வேறு சவால்களை சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)