காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்; இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் ஒரு மாபெரும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளவேண்டிவரும் என ஈரான் எச்சரித்துள்ளது.
காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சரான Hossein Amirabdollahian, ஹிஸ்புல்லா அமைப்பு போரில் இணைந்தால், போர் மத்திய கிழக்கு நாடுகளின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் என்று எச்சரித்துள்ளார்.
ஹிஸ்புல்லா என்பது, ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் செயல்படும் போராளிக்குழு ஆகும். இந்தக் குழுவிடம் 150,000 ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் கணித்துள்ளது. அத்துடன், 12 ஆண்டு கால நீண்ட சிரியப் போரில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த அமைப்பில் உள்ளனர்.
இந்நிலையில், தான், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான Sayyed Hassan Nasrallahவை சந்தித்ததாக தெரிவித்துள்ள Hossein, காசாவில் வாழும் பொதுமக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் ஹிஸ்புல்லா அமைப்பு எடுக்கும் நடவடிக்கையால் இஸ்ரேலில் ஒரு பெரிய நிலநடுக்கமே உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.