இலங்கையில் கல்விக்கான புதிய வரலாற்றை உருவாக்கும் முயற்சியில் அநுர அரசாங்கம்
அடுத்த தசாப்தத்தில் நாடு இருக்க வேண்டிய இடத்திற்கு தற்போதைய அரசாங்கம் அடித்தளம் அமைத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மாத்தளையில் நேற்று நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றை மீண்டும் எழுதவும், கல்விக்கான புதிய வரலாற்றை உருவாக்கவும் மக்களை அழைப்பதாக மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நேற்று பாலர் பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.





