பயங்கரவாத தாக்குதல்: பிரான்சில் ஆயிரக்கணக்கான தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு
ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் வேளையில், 4,530 தேவாலயங்களுக்கு வெளியே 13,500 போலீசார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாதம் தாக்கக்கூடிய மிகவும் கடினமான சூழலில் சேவைகளைப் பாதுகாக்க புனித வெள்ளி முதல் ஈஸ்டர் திங்கள் வரை நாடு முழுவதும் சட்ட அமலாக்கப் படைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
மார்ச் 22 அன்று ரஷ்ய தலைநகரில் உள்ள கச்சேரி அரங்கில் இஸ்லாமிய அரசு ஜிஹாதி குழு நடத்திய தாக்குதலில் 144 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தனது பாதுகாப்பு எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
மொத்தமாக 13,500 வீரர்கள் நாடு முழுவதும் கடமையாற்றிக்கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
நாளை திங்கட்கிழமை மாலை வரை இந்த பாதுகாப்பு தொடரும் எனவும், சந்தேகத்திக்கிடமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.