2026 ஆம் ஆண்டில் உச்சம் தொடும் வெப்பநிலை : ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
2026 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய அளவை விட அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெப்பநிலையானது 1.46C ஆக இருக்கும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.
இது 1850-1900 காலப்பகுதியில் இருந்ததை விட தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முன்பு உலக வெப்பநிலையானது 1.3C ஆகக் காணப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டில் 1.4C ஆகக் காணப்படும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த 2024 ஆம் ஆண்டு காணப்பட்ட வெப்பநிலையை விட குறைவாகவே இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு சராசரி வெப்பநிலையானது 1.55C ஆகக் காணப்பட்டது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5C என்ற நிர்ணயிக்கப்பட்ட வெப்ப வரம்பு முதன்முதலில் 2024 ஆம் ஆண்டில்தான் மீறப்பட்டது. மேலும் 2026 ஆம் ஆண்டும் குறித்த வரம்பு மீறப்படும் என்று வானிலை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை விட கணிசமாக வெப்பமயமாதலுக்கான பாதையில் உலகம் இன்னும் இருப்பதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





