ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்கு திரும்பிய தொலைத்தொடர்பு சேவைகள்
தாலிபான் அதிகாரிகள் தொலைத்தொடர்புகளை நிறுத்திய 48 மணி நேரத்திற்குப் பிறகு, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தான் முழுவதும் பல மாகாணங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
நாட்டில் அரசமைத்துள்ள தலிபான்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த தடை ஏற்பட்டுள்ளது.
நாடு தழுவிய இந்த தொலைத்தொடர்பு முடக்கம் குறித்து தாலிபான் அரசாங்கம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
தாலிபான் அரசாங்கம் ஆட்சியை பிடித்ததில் இருந்து கடுமையான இஸ்லாமிய சட்டங்களை விதித்ததிலிருந்து, நாட்டில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
(Visited 1 times, 1 visits today)





