அமெரிக்காவில் தெலுங்கானா மாணவர் வணிக வளாகத்தில் சுட்டு படுகொலை!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் காசாளராக பகுதிநேர பணியில் இருந்த
சாய் தேஜா நுகரபு மர்ம கும்பல் ஒன்றினால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சாய் தேஜா நுகரபு (வயது 22). கடந்த 3 மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.





