இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் தலிபான் வெளியுறவு அமைச்சர்
தலிபான் அரசாங்கத்தின் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி அக்டோபர் 9ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், காபூலில் இருந்து புது தில்லிக்கு உயர்மட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்ட அமீர் கான் முத்தாகிக்கு, அக்டோபர் 9 முதல் 16 வரை புது தில்லிக்குச் செல்ல அனுமதித்ததை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்க்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய விதித்திருந்த தடையானது நீக்கப்படாததினால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





