ஐ.நா பொதுச் சபையில் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்த சிரியாவின் அல்-ஷாரா

சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தனது முதல் உரையில் சர்வதேசத் தடைகளை நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
“சிரிய மக்களை இனி அவர்கள் கட்டுப்படுத்தாதபடி, தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று நாங்கள் இப்போது அழைப்பு விடுக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பஷார் அல்-அசாத்தின் ஆட்சியால் சீரழிக்கப்பட்ட சிரியாவிற்கு “கண்ணியத்தையும் மரியாதையையும் மீட்டெடுப்பதாக” ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா உறுதியளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் நாட்டின் முதல் அரச தலைவராக அகமது அல்-ஷாரா மாறியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)