சிட்னி துப்பாக்கிச்சூடு : பயங்கரவாத தாக்குதலாக விபரிப்பு!
ஆஸ்திரேலியா – சிட்னியின் போண்டி (Bondi Beach) கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தீவிர விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை பயங்கரவாத தாக்குதலாக அடையாளப்படுத்திய காவல்துறையினர் ஹனுக்கா (Hanukkah) பண்டிகையை கொண்டாடும் யூத குடும்பங்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் கார் ஒன்றில் இருந்து வெடிப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டாவது நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese)”தீய செயல், யூத எதிர்ப்பு, பயங்கரவாதம்” என்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.





