யாழ்.புறநகர் பகுதியில் வாள்வெட்டு கும்பல் மோதல்!! 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப்பட்டமையால் , வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் , அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் , வைத்தியசாலையினுள்ளும் மோதல் போக்குடன் காணப்பட்டதுடன் , மோதலில் ஈடுபடவும் முயன்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)