மெக்ஸிகோவில் இருளில் மூழ்கிய மாநிலங்கள் – 02 மில்லியன் மக்கள் பாதிப்பு!

தென்கிழக்கு மெக்ஸிகோவில் உள்ள மூன்று மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பிரச்சனையால் 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மெக்ஸிகோவின் அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனமான CFE-யின் தொழில்நுட்ப வல்லுநர்கள், யுகடன், காம்பேச் மற்றும் குயின்டானா ரூ மாநிலங்களுக்கான மின்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மின்மாற்றி இணைப்புகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)