இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8 % வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மதிப்பிடப்பட்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானத்துடன் இணைந்து மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்கள் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
2025 நவம்பர் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 364.52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.56 % வருடாந்த வளர்ச்சியெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி உலகளாவிய வர்த்தகத்துடன் இலங்கை அதிகமாக ஒன்றிணைவதையும், சந்தை வாய்ப்புகளை பல்வகைப்படுத்தி ஏற்றுமதி போட்டித்தன்மையை பலப்படுத்த முன்னெடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் வெற்றியையும் எடுத்துக்காட்டுவதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.





