1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் கொலை!! ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்
1991 ஆம் ஆண்டு புக்கரெஸ்டில் இடம்பெற்ற கொலைக்காக சர்வதேச ரீதியாக தேடப்பட்டு வந்த 53 வயதுடைய இலங்கையர் ஒருவர் இந்த வருட ஆரம்பத்தில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க அவர் ஏப்ரல் 23 அன்று ருமேனியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். பொலிஸ் செய்திக்குறிப்பின்படி, அந்த நபர் 1991 டிசம்பரில் ஒரு வெளிநாட்டு குடிமகனைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் பாதிக்கப்பட்டவரைக் கட்டி, புக்கரெஸ்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஒரு கம்பளத்தில் போர்த்தி, அவரை க்ராங்காசி பகுதிக்கு கொண்டு சென்றார், அங்கு உடலை ஏரியில் வீசியுள்ளார்.
இந்த குற்றத்திற்காக அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளி ஜேர்மனியில் இருக்கும் இடத்தைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து, ருமேனிய அதிகாரிகள் தங்கள் ஜேர்மன் அதிகாரிகளுடன் இணைந்து ஜனவரி 3 அன்று மோயர்ஸில் அவர் கைது செய்தனர்.
இந்நிலையில், ருமேனியாவுக்கு அழைத்துவரப்பட்டதும் தண்டனையை நிறைவேற்ற அந்த நபர் சிறையில் அடைக்கப்படுவார்.