ட்ரம்ப்பை சந்தித்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
திரு. அனுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி அன்புடன் வரவேற்றதாகவும், அவர்கள் சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயார்க்கிற்கு வந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சிறப்பு இரவு விருந்தின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.





