இலங்கை அரசியல் களம் : அரசியலில் இருந்து விலகும் பிரபல அமைச்சர்கள்!

தற்போது கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் அடங்குவர்.
ஏனையவர்களில் காமினி லொகுகே, ஜோன் செனவிரத்ன, மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் அடங்குவர்.
தவிர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற பாரம்பரியக் கட்சிகள் நிறைய இளம் இரத்தத்தை அதில் புகுத்த முடிவு செய்துள்ளன.
(Visited 42 times, 1 visits today)