இலங்கை செய்தி

எந்த தேர்தலுக்கும் தயார் – மகிந்தவின் நெருங்கிய சகா அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கதைகள் புதிய கதைகள் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலிலும்  மக்கள் தம்முடன் இருப்பதாக கூறினர். ஆனால் தேர்தலில் தோற்றுப் போனதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலுக்கும் தயாராக இருப்பதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!