இலங்கை: இணையவழி நிதி மோசடி! மேலும் 15 சீனர்கள் கைது
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 சீனப் பிரஜைகளைக் கொண்ட மற்றுமொரு குழு கோட்டை வெலிக்கடையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 15 கணினிகள் மற்றும் 15 கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.





