இலங்கை, ஜப்பான் கடற்படைக் கூட்டுப் பயிற்சி – கொழும்பு வந்தது போர்க்கப்பல்!
ஜப்பானிய கடற்படையின் ‘அகிபோனோ’ என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாகக் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
150.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரி போர்க்கப்பலான ‘அகிபோனோ’வில், 158 மாலுமிகள் உள்ளனர்.
கொழும்பில் தரித்து நிற்கும் போது, கப்பலின் பணியாளர்கள் இலங்கையின் சில சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவார்கள்.
அத்துடன், இரு கடற்படைப் படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட இலங்கை கடற்படையுடனான தொழில்முறைப் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.
ஜப்பானிய போர்க்கப்பல், கொழும்பு கடலில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை நடத்திய பின்னர், 31ஆம் திகதி நாட்டை விட்டுப் புறப்படும்.






