மீண்டெழ தயாராகிறது இலங்கை! சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டுக்கு நாள் நிர்ணயம்!
சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு உறுதிப்படுத்தினார்.
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கிலேயே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு நடத்தப்படுகின்றது.
“ பேரிடரால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் உலக வங்கியின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்னரே, துல்லியமான தரவுகளை நோக்கி நகர முடியும்.
கடனை மீள செலுத்துவதற்கு இலங்கைக்கு அவகாசம் வழங்குவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன.
எனவே, குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையால் மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
அதேவேளை, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கையின் எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





