2026இல் 05 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் இலங்கை!
இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5% க்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்த ஆண்டிற்கு இணையாகவும், அடுத்த ஆண்டில் IMF கணிப்புகளை கணிசமாக விஞ்சும் என்றும் மூத்த அமைச்சர் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தியிடம் குறிபிட்டுள்ளார்.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மறுசீரமைப்பு வளர்ச்சியினால் இந்த வேகம் உந்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிட்வா சூறாவளியினால் 22 மில்லியன் மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவும், நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்கவும் 07 பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த மாதத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கி 120 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
இதற்கிடையே இலங்கையின் 200 மில்லியன் டொலர் அவசர நிதிக்கான கோரிக்கையை IMF இன்று அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நாட்டின் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ கூறினார்.
“எனவே விரைவான பதில், நிறுவனங்களின் ஆதரவு மற்றும் தற்போதுள்ள வளர்ச்சித் திட்டங்களால் பொருளாதார வளர்ச்சி உந்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





