கனடாவின் மனிடோபா மாநிலம் வழங்கும் சிறப்பு சலுகை – விசா காலாவதியானாலும் தங்கலாம்!!
கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலம் சிறப்பு பணியாளர் அனுமதி விசாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
நீங்கள் மனிடோபாவில் வசிக்கும்பட்சத்தில், உங்களின் பணி அனுமதிப்பத்திரம் ஏற்கனவே காலாவதியாகியிருந்தால், அல்லது விரைவில் முடிவடையும் நிலையில் இருந்தால் தகுதிவாய்ந்த மாகாண நியமனத் திட்ட வேட்பாளர்களுக்கு 02 வருட சிறப்பு பணி அனுமதி பத்திரம் வழங்கப்படும்.
தொழிலாளர்கள் இடையூறு இல்லாமல் மாகாணத்தில் தங்குவதற்காக இந்த திட்டம் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பயனைப் பெற விதிகளைப் பூர்த்தி செய்து, தகுதியான ஆவணங்களுடன், உங்கள் IRCC கணக்கு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதன்மூலம் உங்களுடைய பணி அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்தாலும், நீங்கள் மேலும் இரண்டு வருடம் கனடாவில் தங்கி வேலைகளை தொடரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





