மலைநாட்டில் அமைந்துள்ள பாடசாலை வளாகங்களில் சிறப்பு ஆய்வு நடவடிக்கை!
டித்வா சூறாவளியை தொடர்ந்து மலையக பகுதிகளில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாப்பு பகுதிகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.
இதற்கமைய நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களின் நிலச்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தற்போது ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆய்வுகளுக்கு, பேராதனை, மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் மற்றும் NBRO அதிகாரிகள் அடங்கிய 15 பேர் கொண்ட நிபுணர் குழு தலைமை தாங்குகிறது.
இதற்கிடையில், நிலவும் மழை நிலைமைகள் குறைந்து வருவதால், கண்டி மாவட்டத்திற்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை திருத்தப்பட்டுள்ளது.
உடுதும்பர, தொலுவ, மினிபே, மெததும்பர மற்றும் கங்கைஹல கோரலே பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மாத்திரம் இப்போது சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.





