வடகொரியாவின் குப்பை நிரம்பிய பலூன்கள் வரும் என்ற அச்சத்தில் தென்கொரியா

குப்பை நிரம்பிய பலூன்களை வடகொரியா அனுப்பும் என தென்கொரியா எதிர்பார்த்து விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்கு வந்தவர்கள், K-pop இசைத் தொகுப்புகள் நிரம்பிய 10 பலூன்களையும் பியோங்யாங்கிற்கு எதிரான சுமார் 200,000 துண்டுப்பிரசுரங்களையும் அனுப்பினர்.
வடகொரிய எல்லைக்கு அவை சென்றதைத் தென்கொரியா உறுதிசெய்தது.
வடகொரிய எல்லைக்கு அருகில் உள்ள கடற்பகுதிக்குள் நேற்று 500 பிளாஸ்ட்டிக் போத்தல்களை வீசியதாகத் தென்கொரியாவின் இன்னோர் ஆர்வலர் குழு தெரிவித்தது.
போத்தல்களுக்குள் அரிசி, பணம், தென்கொரிய நாடகத் தொடர்களைக் கொண்ட USB சாதனங்கள் இருந்தன.
அந்த நடவடிக்கைகள், வடகொரியா மீண்டும் குப்பை நிரம்பிய பலூன்களைத் தென்கொரியாவுக்குள் அனுப்புமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளன.
(Visited 39 times, 1 visits today)