தென்னாப்பிரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!
தென்னாப்பிரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகர் நேற்று (03.04) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் பதவி துறந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் வழக்கறிஞர்கள் சபாநாயகர் நோசிவிவே மபிசா-நகாகுலா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த உள்ளதாகக் கூறினர்.
அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தக்காரரிடமிருந்து சுமார் $135 000 லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து மபிசா-நகாகுலா தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்ததாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.
“எங்கள் நாட்டின் சட்ட அமலாக்க முகவர்களால் எனக்கு எதிராக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விசாரணையை சமாளிக்க எனது நேரத்தையும் கவனத்தையும் அர்ப்பணிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.