தமிழ்நாட்டில் பாம்பைப் பயன்படுத்தி தந்தையைக் கொன்ற மகன்கள்
தமிழ்நாட்டின்(Tamil Nadu) திருவள்ளூர்(Tiruvallur) மாவட்டத்தில் பாம்பு கடித்து இறந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் சொந்த மகன்களால் 3 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பாடசாலை ஆய்வக உதவியாளரான 56 வயதான E P கணேசன், அக்டோபரில் பொதட்டூர்பேட்டை(Pothatturpet) கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார், குடும்பத்தினர் பாம்பு கடித்ததாக புகார் அளித்தனர்.
பின்னர், காப்பீட்டு நிறுவனத்தின் சந்தேகத்தின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) இந்த வழக்கு குறித்து விசாரணைகளை ஆரம்பித்தது.
அப்போது பாதிக்கப்பட்டவரின் மகன்கள் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொலை செய்தது தெரிய வந்ததுள்ளது.
இந்நிலையில், கணேசனின் இரண்டு மகன்கள் மற்றும் பாம்பை ஏற்பாடு செய்து கொலைக்கு உதவிய நான்கு நண்பர்கள் உட்பட ஆறு பேர் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.





