கனேடிய மக்களுக்கு வெளியான சற்று நிம்மதியளிக்கும் தகவல்!
கனடாவின் கியூபெக் மாநிலத்தில் காட்டுத்தீ ஒரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதாக மக்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரியும் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 44க்குக் குறைந்துள்ளது.
அதற்கு முந்திய நாள் அது 72ஆக இருந்தது. அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிய நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 1,200 தீயணைப்பாளர்கள் கியூபெக் காட்டுத்தீயை அணைக்கக் கைகொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் இன்னும் 400க்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிகிறது. எதிர்வரும் நாள்களில் எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவை மிஞ்சும் வகையில் வானிலை வெப்பமாகவும் வறட்சியாகவும் இருக்கலாமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதனால் புதிய காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்படக்கூடும். நாளை கியூபெக் வட்டாரத்தில் மழை லேசாத் தூறக்கூடுமென வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.