பொலிவிய ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள்
பொலிவியாவின் “சதிப்புரட்சி” பற்றி அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் மாளிகை ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அரசாங்க கட்டிடங்கள் அமைந்துள்ள லா பாஸின் முரில்லோ சதுக்கத்தின் நுழைவாயில்களை துருப்புக்கள் அடைத்து, முக்கிய அரசாங்க கட்டிடத்தின் கதவுகளை தாக்கி வீரர்கள் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர்.
பொலிவியன் அமைச்சர் மரியா நெலா பிராடா தனது முகநூல் கணக்கில் அரசு கட்டிடத்தில் உள்ள ஜன்னலில் இருந்து பார்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
“நான் அரண்மனையில் இருக்கிறேன். நீங்கள் பார்க்கிறபடி, இது ஆயுதமேந்திய டாங்கிகள் மற்றும் துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட பிளாசா முரில்லோ” என்று அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆர்ஸ் பின்னர் பொலிவியர்களை “சதிப்புரட்சிக்கு” எதிராக அணிதிரட்டுமாறு வலியுறுத்தினார்.
“பொலிவிய மக்கள் ஜனநாயகத்திற்கு ஆதரவாக ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக அணிதிரட்டவும்,” என்று ஜனாதிபதி மாளிகைக்குள் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து நாட்டுக்கு தொலைக்காட்சி செய்தியில் ஆர்ஸ் தெரிவித்தார்.
“பொலிவியன் உயிர்களை மீண்டும் ஒருமுறை பறிக்கும் சதி முயற்சிகளை அனுமதிக்க முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.