50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரனைச் சுற்றி 10 நாட்கள் பயணத்திற்கு தயாராகும் விண்வெளி வீரர்கள்

50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரனைச் சுற்றி 10 நாட்கள் பயணத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தின் முதல் சில நாட்களில் இது நடைபெறும் என்றும், இந்த முறை நான்கு விண்வெளி வீரர்கள் இதில் இணைவார்கள் என்றும் நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் சந்திர பயணத்திற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழும் இந்தப் பயணம், மனித விண்வெளி ஆய்வில் மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் என்று நாசா நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் டூ என்று அழைக்கப்படும் இந்த பயணத்தில் திட்டமிட்டபடி பயணிக்கும் 4 விண்வெளி வீரர்கள் 10 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப உள்ளனர், மேலும் இந்த பயணத்தின் நோக்கம் சந்திரனில் தரையிறங்குவதற்கான ராக்கெட் மற்றும் விண்கல அமைப்புகளைச் சோதிப்பதாகும்.
அதன்படி, இந்தப் பயணத்தின் வெற்றியின் அடிப்படையில், சந்திரனில் தரையிறங்க ஆர்ட்டெமிஸ் த்ரீயை நாசா ஏவ உள்ளது.