பிரித்தானிய விமானத்தின் கழிவறையிலிருந்து வெளியேறிய புகை; பயணிகளை உறையவைத்த சம்பவம்
 
																																		பிரித்தானியாவுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீரென கழிவறையிலிருந்து புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செவ்வாய்கிழமை (30) ஸ்பெயினின் பால்மா நகரத்திலிருந்து புறப்பட்டு பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த RyanAir-ன் RK 3442 விமான இந்த சம்பவம் நடந்தது.விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில், கேபின் கழிவறையிலிருந்து புகை வருவதைப் பார்த்த விமானப் பணிப்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கழிவறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருப்பதை அறிந்த பின்னர் பயணிகளை சரிபார்த்தபோது, ஒருவர் உள்ளே ஒருவர் புகைபிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.அவரது பெயர் மற்றும் விவரங்ககள் கேபின் முழுவதும் அறிவிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது. பின்னர் விமான குழுவினர் காவல்துறை உதவிக்கு அழைத்தனர்.
விமானம் மான்சேஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்கதும், விமானத்தில் பயணித்த 180 மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த பயணியை, முதல் ஆளாக பொலிஸார் வெளியேற்றி கைது செய்தனர்.சிறுது நேரம் கழித்து அறிவிப்பைத் தொடர்ந்து, மற்ற பயணிகள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.
 
        



 
                         
                            
