ஸ்பெயினில் காணாமல்போன சிங்கப்பூர்ப் பெண் – உடலில் கத்திக் குத்துக் காயங்கள்
ஸ்பெயினுக்குச் சென்ற 39 வயது Audrey Fang என்ற சிங்கப்பூர்ப் பெண் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்குக் கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய சிங்கப்பூர் நாட்டசர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 4ஆம் திகதி குறித்த பெண் ஸ்பெயினுக்குத் தனியாகச் சென்றுள்ளார். ஏப்ரல் 12ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்குத் திரும்பியிருக்க வேண்டியது.
பாங் ஸ்பெயினின் Xàbia பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலில் ஏப்ரல் 10 வரை தங்கத் திட்டமிட்டார். கடைசியாக ஏப்ரல் 9ஆம் திகதி தமது அன்புக்குரியவர்களை அவர் தொடர்புகொண்டார்.
அன்று அவர் இரவு சுமார் 8.45 மணியளவில் ஹோட்டல் அறையைவிட்டுச் சென்றபின் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பாங்கின் உடைமைகள் ஹோட்டல் அறையில் இருந்தன. பார்சலோனாவில் (Barcelona) இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட விமானத்தில் அவர் இல்லை.
ஏப்ரல் 10ஆம் திகதி Abanilla வட்டாரத்தில் பாங்கின் சடலம் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டது. ஆனால் அவரை நேற்றைய தினமே அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
பாங்கின் மரணத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நாட்டவருக்கும் அவருக்கும் என்ன உறவு என்பது இன்னும் தெரியவில்லை.