அமெரிக்காவுக்கு நிகராக மாறவுள்ள சிங்கப்பூர் – பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள புரட்சி
அமெரிக்க டொலருக்கு நிகராக சிங்கப்பூரின் நாணய பெறுமதி பாரிய அளவில் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
2040ஆம் ஆண்டில் இதற்கான வாய்ப்பு ஏற்படும் என சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் 15 ஆண்டுகளில் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் Straits Times குறியீடு 10,000 புள்ளிகளை தாண்டும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2.5 வீதம் அதிகரிக்கும் என DBS வங்கியின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறன் மற்றும் உற்பத்தி அதிகரிப்பால், 2040ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் பொருளாதாரத்தின் மதிப்பு 1.4 டிரில்லியன் டொலர்களாக அதிகரிக்கலாம்.
உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரின் நிலையான பொருளார நகர்வுகள் ஸ்திரமான நிலையில் உள்ளதாக DBS வங்கியின் ஆய்வுக் குழுமத்தின் தலைவர் டிமதி வோங் (Timothy Wong) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





