செய்தி விளையாட்டு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக ஷுப்மான் கில் நியமிப்பு – வெளியான காரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் சர்வதேச (ODI) தலைவர் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக கில்லை கேப்டனாக நிலைநிறுத்த போதுமான அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.

கில் தலைமையிலான இந்தியாவின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடராகும்.

இது ஒக்டோபர் 19 ஆம் திகதி தொடங்குகிறது. ஏற்கனவே டெஸ்ட் தலைவராக இருக்கும் கில், இப்போது இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் முக்கிய தலைமைப் பாத்திரத்தை வகிப்பார்.

இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான ஒருநாள் போட்டிகள் காரணமாக புதிய கேப்டன் சுப்மான் கில் தயாராகும் நேரம் ஒரு சவாலாக உள்ளது என்று தேர்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி