லண்டனில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி மீண்டும் கைது!
பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய நாட்டவரான ஹடுஷ் கெர்பர்ஸ்லேசி கெபாடு (Hadush Kebatu) நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஒரு வருட சிறை தண்டனையை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை HMP செல்ம்ஸ்ஃபோர்டில் (Chelmsford) இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் (Finsbury Park) பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மெட் காவல்துறை வசம் உள்ள அவர் விரைவில் லண்டன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுவார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி (David Lammy), தவறான விடுதலை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சிறைகளில் விடுதலை சோதனைகளை “உடனடியாக வலுப்படுத்த” உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.




