இலங்கையின் பல பகுதிகளுக்கு கடுமையான மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில் மண்சரிவு தொடர்பான எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய அறிவிப்பு இன்று (19) காலை 10 மணி முதல் நாளை (20) காலை 10 மணி வரை செல்லுபடியாகும்.
இதன்படி முதல்நிலை எச்சரிக்கையின் கீழ், சீதாவாக்கா, இங்கிரியா, ஹொரனா, தெஹிம்பிடி, கொத்மலை, இரத்தினபுரி ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயிராபத்துக்கள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)