விளையாட்டு

இவ்வருட T20 உலக கிண்ண தொடருக்கான அட்டவணை

உலகக் கிண்ண டி20 தொடர் வரும் ஜூன் 1-ம் திகதி ஆரம்பமாகி 29-ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றது.

இதில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதையடுத்து, இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த உலகக் கிண்ண டி20 தொடரானது வரும் ஜூன் 1-ம் திகதி ஆரம்பமாகி 29-ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்துகின்றன.

இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் , நேபாளம், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்தப் போட்டிகள் ஜூன் 1-ம் திகதி முதல் 18-ம் திகதி வரையில் நடைபெறும். ஜூன் 26 மற்றும் 27-ம் திகதிகளில் முதல் மற்றும் 2வது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும்.

கடைசியாக ஜூன் 29-ம் திகதி இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது.

குரூப் A:
இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா

குரூப் B:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமான்

குரூப் C:
நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா,

குரூப் D:
தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து, நேபாளம்

இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 24 ஆம் திகதி வரையில் நடைபெறும்.

(Visited 6 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content