துருக்கிய குடிமக்கள் பயணித்த கப்பலை குறிவைத்து தாக்கிய ரஷ்யா!
உக்ரைனின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில், ரஷ்யா வேண்டுமென்றே தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
11 துருக்கிய குடிமக்களுடன் பயணித்த கப்பலொன்றை குறிவைத்து நேற்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக உக்ரைனிய இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த கப்பல் சூரிய காந்தி எண்ணெயை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் உக்ரைனின் வான் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய ரஷ்யா கடல்சார் சட்டங்களை மீறியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை துருக்கிக்குச் சொந்தமான மூன்று கப்பல்களை ரஷ்யா சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





