நேட்டோவுடனான போருக்கு தயாராகி வரும் ரஷ்யா – அரசியல் அவதானிகள் எச்சரிக்கை!
நேட்டோ இராணுவக் கூட்டணியுடன் நேரடி மோதலுக்குத் தயாராக, புட்டின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் 15 வரை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடனான ஒப்பந்தங்களில் சுமார் 292,000 பேர் கையெழுத்திட்டுள்ளதாக ரஷ்யாவின் உள்விவகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாரத்திற்கு சராசரியாக 7,900 பேர் ஆட்சேர்க்கப்படலாம் என யூகிக்கப்படுகிறது.
‘ரஷ்ய இராணுவக் கட்டளையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தொடர்ந்து துல்லியமான அறிக்கைகளை வழங்கிய’ வட்டாரம் வெளியிட்ட தகவல்களின்படி, சில இராணுவ வீரர்கள் ஜுலை மாதம் முதல் இராணுவத்தில் சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து கிரெம்ளின் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் போர்க்களத்தில் அதன் போர் இலக்குகளை அடைவதில் உறுதியாக உள்ளது என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.




