கருங்கடலில் டால்பின்கள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள ரஷ்யா; பிரிட்டன் அமைச்சகம்
ரஷ்யா கருங்கடல் கடற்படை தளத்தில் ரஷ்ய கடற்படை பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்தி, தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1960களின் பிற்பகுதிகளில் சோவியத் யூனியன் கடல் பாலூட்டிகளுக்கு கப்பல்களில் வெடிமருந்துகளை நடுதல் அல்லது தேடுதல் போன்ற இராணுவ நோக்கங்களுக்காக Sevastopol தளத்தில் ஈடுபட்டது.
ஆனால், உண்மையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டார்களா என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. எனினும், டால்பின்கள் பின்னர் இழந்த இராணுவ மற்றும் விஞ்ஞான உபகரணங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டன.
தற்போது உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா அதேபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அதாவது, கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள டால்பின்களின் எண்ணிக்கை ஏப்ரல் முதல் சூன் வரை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்களை பிரித்தானிய இராணுவம் மேற்கோள் காட்டியுள்ளது.
இதுதொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், ‘கருங்கடல் கடற்படை தளத்தில் ரஷ்ய கடற்படை பயிற்சி பெற்ற டால்பின்களைப் பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இவை எதிரி டைவர்ஸ்களை எதிர்க்கும் நோக்கம் கொண்டவை. 2022 கோடையில் இருந்து கருங்கடல் கடற்படை, உக்ரைனை ஆக்கிரமிக்க துருப்புகளுக்கு உத்தரவிட்டதில் இருந்து முதல் 200 நாட்களில், ரஷ்யாவின் கடற்படை பாதுகாப்புக்கு பாரிய மேம்பாடுகளை முதலீடு செய்துள்ளது’ என தெரிவித்துள்ளது.
முன்னதாக, சோவியத் திட்டத்தில் நீருக்கடியில் எதிரிகளை எவ்வாறு கொள்வது என்பது பற்றிய பயிற்சிகள் டால்பின்களுக்கு அளிக்கப்பட்டதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.