ரஷ்ய நிழல் கடற்படையின் 41 கப்பல்களுக்கு தடை விதிப்பு!
ரஷ்யாவின் நிழல் கடற்படையின் 41 கப்பல்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது.
இதன் மூலம் தடை விதிக்கப்பட்ட கப்பல்களின் மொத்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது.
கப்பல்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான பரந்த அளவிலான சேவைகளை இனி பெற முடியாது என்றும் ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 19 தடைகளை விதித்துள்ளது. ஆனால் மொஸ்கோ தடைகளுக்கு ஏற்ப தனது திட்டத்தை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





