உக்ரைனின் பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் மரணம்
உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் இரண்டு புகையிரதம் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தி, ஷோஸ்ட்கா நிலையத்தின் மீதான தாக்குதலை “காட்டுமிராண்டித்தனம்” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, ரஷ்யா வேண்டுமென்றே பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைனில் நடந்த போரில் பொதுமக்களை குறிவைப்பதை ரஷ்யா பலமுறை மறுத்துள்ளது, இருப்பினும் அதன் இராணுவத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)




