உக்ரைனில் (Ukraine) மழலையர் பாடசாலையை தாக்கிய ரஷ்யா – 48 குழந்தைகளை மீட்ட வீரர்!
உக்ரைனின் (Ukraine) கீவ் நகரில் உள்ள மழலையர் பாடசாலையில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருந்து 48 குழந்தைகளை காப்பாற்றிய ஒருவர் பற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைனின் சிவில் பாதுகாப்பு சேவையின் மேஜர் ஜெனரல் ஒருவர் எரியும் கட்டடத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் காட்சி கெமராவில் பதிவாகியுள்ளது.
ஒலெக்சாண்டர் வோலோபுவேவ் (Oleksandr Volobuev) என்ற நபர் குறித்த குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளார்.
ரஷ்யாவின் சமீபத்திய இந்த தாக்குதல் அதன் கோர முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளது. குழந்தைகள் என்று கூட பாராமல் அக்கட்டடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்த போரை சுமூகமாக நிறைவுக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையை உடைத்துள்ளது.
50 கிலோ எடையுள்ள ஈரானால் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோனால் (Shahed drone) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





