அறிந்திருக்க வேண்டியவை ஐரோப்பா

கிளாஸ்கோவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைகள் – பெரும்பாலானோர் வீடற்றோர் ஆகலாம்!

பிரித்தானியாவின் கிளாஸ்கோ பகுதியில் வீட்டு  வாடகைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

புள்ளிவிபரங்களின்படி, ஆகஸ்ட் வரையிலான 12 மாதங்களில் கிரேட்டர் கிளாஸ்கோவில்  தனியாரின் வசம் உள்ள வீடுகளுக்கான வாடகைகள் மாதத்திற்கு £68 அதிகரித்து £1,251 ஆக உயர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் தனியார் வாடகைகள் 29.9% அதிகரித்துள்ளன.

அதிகரித்து வரும் வாடகைகள் மக்களை வீடற்ற நிலைக்குத் தள்ளக்கூடும் என்று தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த அதிகரிப்பு மக்கள் கூடுதலாக 5.7% உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஸ்காட்டிஷ் அரசாங்க அறிக்கையில் கிளாஸ்கோ ஸ்காட்லாந்தின் வீடற்ற தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிளாஸ்கோவில் வாடகை பணவீக்கம் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்