வட்டி விகிதக் குறைப்பு: நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துமா?
பிரித்தானியாவில் கடந்த நவம்பர் மாத சில்லறை விற்பனை எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ‘பிளாக் பிரைடே’ (Black Friday) எனப்படும் விசேட சலுகைக்காலத் தள்ளுபடிகள் வழங்கப்பட்ட போதிலும், நுகர்வோர் மத்தியில் அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய புள்ளிவிபரத் திணைக்களம் (ONS) இன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி:
சில்லறை விற்பனை 0.1% சரிவைச் சந்தித்துள்ளது. இது 0.4% வளர்ச்சியடையும் என்ற பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது.
சுப்பர் மார்க்கெட் விற்பனையானது தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அண்மையில் வட்டி விகிதங்கள் 3.75% ஆகக் குறைக்கப்பட்டிருப்பது நுகர்வோரின் செலவிடும் திறனை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய வரவுசெலவுத் திட்டத்தின் வரி அதிகரிப்பு தொடர்பான அச்சம் மக்களிடையே சேமிப்பு மனப்பான்மையை உருவாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், இந்த மந்தநிலை வர்த்தகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





